பப்ஜிக்கு ‘நோ’ சொன்னதால் தந்தையின் தலையை வெட்டிய கொடூர மகன்!
கர்நாடக மாநிலம் பெலகாவி எனும் மாவட்டத்தில் உள்ள காகதி எனும் பகுதியில் வசித்து வருபவர் ரகுவீர். இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி. இவர் பெயர் சங்கரப்பா ஆகும். வீட்டில் இருக்கும் ரகுவீர் எப்போது பார்த்தாலும் தனது மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் தந்தை சங்கரப்பாவிற்கும், ரகுவீருக்கும் இடையே பிரச்சனை அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் ரகுவீர் போனுக்கு ரீசார்ஜ்செய்ய தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர தந்தை மறுக்கவே வெளியே சென்று அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னலை கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்து ரகுவீரை போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த பிறகும் றகுவீர் பப்ஜி விளையாட்டை விளையாடி உள்ளார். இதில் மீண்டும் சங்கரப்பாவிற்கும், ரகுவீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர் நள்ளிரவில் தனது தந்தையை சரமாரியாக வெட்டி தலையை துண்டாக வெட்டி எறிந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே வந்து பார்த்து போலீசுக்கு புகார் தெரிவித்தனர்.
பின்னர் ரகுவீரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தன் தந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். மகனே தந்தையைக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.