அதிரடி விலையேற்றம்! தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆலோசனை!

Default Image

சென்றவாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் சிங்கிள் பேஸ் மீட்டர் பாதுகாப்பு கண்டனம் 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தவும், மூன்று பேஸ் மீட்டர் பாதுகாப்பு கட்டணம் 600 ரூபாயில் இருந்து 1800 ரூபாயாக உயர்த்தவும், புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பு கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தவும் பரிசீலனை செய்யபட்டுள்ளது.

 

அதேபோல் வணிகரீதியிலான மின்உபயோக கட்டணம் 1 கிலோ வாட்டிற்கு 500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தவும் பரிசீலனை நடத்த்ப்பட்டதாம். இதுவரை மின் இணைப்பு ஏதும் பழுதானால், மின் ஊழியர்கள் இலவசமாக பார்த்து செல்வர். அனால் தற்போது அதற்கும் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாம்.  மின் ஊழியர்கள் சிங்கிள் பேஸ் வகையினை சரிபார்க்க 580 இருந்து 1920 வரை வாங்கலாம் என பேசப்பட்டுள்ளது.  3 பேஸ் சரிபார்க்க அதிகபட்சமாக 3810 ரூபாய் வரையிலும் உயர்த்த திட்டமிட்டு உள்ளார்களாம்.

இந்த விலை உயர்வை பொது மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் பரிசீலித்து அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கடைசியாக 2004ம் ஆண்டுதான் விலையேற்றம் அமல் படுத்தப் பட்டிருந்தது அதற்குப் பிறகு தற்போது 19 ஆண்டுகள் கழித்து இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்