இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள்ள யாரு வாரங்க தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் நடக்க போவது என்ன?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் freeze என்ற டாஸ்கினை வைக்கவுள்ளார்களாம்.
இந்த டாஸ்கில், அவர்கள் குடும்பத்தில் அல்லாது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தரவுள்ளனர். ஆனால், அவர்களை பார்த்தாலும் அவர்கள் ஆடாமல், அசையாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க்.
இந்நிலையில், ஈழத்து பெண் லொஸ்லியா, தனது அப்பாவை 10 வருடங்களாக பிரிந்துள்ளார். இதனையடுத்து, லோசலியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.