திருச்சி : முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்திற்கு நீர் திறப்பு!
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று 35,000 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறது.
இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது 45ஆயிரம் கன அடி நீர் திருச்சிக்கு முக்கொம்பு அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதில் 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடி நீர் வீதம் கொள்ளிடம் ஆற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது. 33 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது.