அடுத்தமுறை போர்வந்தால் சொந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தியே போர்!
இனி போர் வந்தால் சொந்த நாட்டு ஆயுதங்களை பயன்படுத்தியே போர் நடக்கும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார் .
அடுத்தமுறை போர்வந்தால், சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் துணையுடனே போரிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ராணுவத் தொழில்நுட்பக் கருத்தரங்கில் பேசிய அவர், வீரர்களுக்கு குறைந்த எடை கொண்ட குண்டுதுளைக்காத உடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்புத்துறைக்குத் தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து வருவதாகவும், அடுத்த முறை போரிடும் சூழல் வந்தால், சொந்த நாட்டு ஆயுதங்கள் மூலமே போரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் நவீனத்துவம் தேவைப்படுவதாக கூறிய பிபின் ராவத், எதிர்காலப் போர்கள் கடினமாக இருக்கும் என்பதால், அதற்கான முன் தயாரிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com