ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி கட்சி கருத்து தெரிவித்துள்ளது .அதில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது .பல்வேறு உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், கூட்டாட்சி அமைப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.