திருமாவளவன் தமிழில் பேசினால் ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை என கேட்கிறார்கள்-அமீர்
அரசியல் தகுதித் தேர்வு வைத்தால் அந்த தேர்வில் திருமாவளவன் மட்டுமே வெற்றி பெறுவார் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விழா ஒன்றில் பிரபல இயக்குனர் அமீர் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசியல் தகுதித் தேர்வு வைத்தால் அந்த தேர்வில் திருமாவளவன் மட்டுமே வெற்றி பெறுவார்.மற்ற அனைவரும் அரசியல் தேர்வில் சராசரி மதிப்பெண்கூட பெறமாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் அருகில் அமர்ந்துகொண்டு இந்தி பேசினால் என் தாய்மொழி என்று சொல்கிறார்கள் ஆனால் மக்களவையில் திருமாவளவன் தமிழில் பேசினால் ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை என கேட்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.