பெண் குழந்தைகளுக்காக விருது வாங்கிய இரண்டு தமிழக மாவட்டங்கள்!
பிரதமர் நரேந்திர மோடியால், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் போன்ற கொள்கைகளை முன்னனிலைப்படுத்தி பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளை படிக்கவைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பாலின விகதத்தில் இடையறாது முன்னேற்றம் கண்டுவரும் தமிழ் நாட்டின் நாமக்கல் மாவட்டம், 2019ம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்ட பாராட்டு விழாவில் விருது பெற்றுள்ளது. திட்டக் குழுவினரின் உழைப்பிற்கு எனது பாராட்டுகள். pic.twitter.com/JObwQkiqp8
— Smriti Z Irani (@smritiirani) September 6, 2019
இதன்மூலம், முதலில் 100 மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் 640 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்கள் என இந்தியாவில் 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்க்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டக் குழுவினர் சமூகத்தினரிடையே ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தலைசிறந்து விளங்குகின்றன. பெருமைக்குரிய விருதினைப் பெற்றுள்ள திட்டக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் pic.twitter.com/5sgQBGI5AM
— Smriti Z Irani (@smritiirani) September 6, 2019
இந்த விருதினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிர்தி ராணி வழங்கினார். இந்த விருதினை டெல்லி சென்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.