#LIVE சந்திராயன் 2! திக் திக் 15 நிமிடங்கள் தொடங்கியது!
நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு மாறி, பின்னர், நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் 2 விண்கலம் சுற்றிவருகிறது. பின்னர் ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் லேண்டர் மட்டும் தனியாக பிரித்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது.
இந்த விக்ரம் லேண்டர் இன்னும் 15 நிமிடங்கள் கழித்து நிலவில் கால்பதிக்கும் சரித்திர நிகழ்வை படைக்க உள்ளது. இதற்கான கட்டளைகளை இஸ்ரோ அனுப்பிவிட்டதாகவும். வெற்றிகரமாக அந்த கட்டளைகளை லேண்டர் பெற்றுவிட்டதாகவும் இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியானது. இதனால் கண்டிப்பாக வெற்றிகரமாக லேண்டர் தரை இறங்கி பிறகு, பிரக்யான் சாதனம் நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.