சட்ட பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல : சட்டத்துறை அமைச்சர் மதுசாமி
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்துள்ளது. லெட்சுமணன் சவடி கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, சட்ட பேரவையில், தனது செல்போனில் ஆபாசப்படம் படம் பார்த்துக்கண்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இவருக்கு தற்போது எடியூரப்பா தலைமையிலான அரசு அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளது. லெட்சுமணன் ஆபாச படம் பார்த்தது குறித்து சட்டத்துறை அமைச்சர் மதுசாமி அவர்கள் சமீபத்தில் கூறுகையில், ‘சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறானது தான். ஆனால், அந்த விவாதம் தேவையற்றது.’ என்றும் தெரிவித்துள்ளார்.