டெல்லியில் உள்ள திகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு
ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் டெல்லி திகார் சிறைக்குள் அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம்.இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் சிதம்பரம்.