இளைய தலைமுறையினரை பாதிக்கும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் : தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி மக்கள் ரசிகர்கள்களாகியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள், பிக்பாஸ் போன்ற கலாசார சீர்கேடான நிகழ்ச்சிகளை நடத்தி, இளைய தலைமுறையினரின் மனதில் விதைக்கின்ற, குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்கிற இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்த கூடாது என தங்களது கோரிக்கையை முன்வைப்பதாக கூறியுள்ளார்.
கமலஹாசன் அரசியல் கட்சியை நடத்துகிறார். அவர் மக்களின் வாழ்க்கையை சிதைக்கக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்றும், விஜய் தொலைக்காட்சியும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.