ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்
இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.சிபிஐ காவலில் இருந்து வரும் சிதம்பரம் தரப்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 5 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கின் உத்தரவும் அதே நாளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.குறிப்பாக காவல் நீட்டிப்பு குறித்து தனி நீதிமன்றத்தில் அனுமதிபெறவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.
இதன் பின்னார் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அங்கு உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.மேலும் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.