தமிழக அரசு GST வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறை! ஆளுநர் உரையில் பாராட்டு …
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சட்டபேரவையில் உரையாற்றியது
உரையை வாசிப்பதற்கு முன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார் ஆளுநர். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை:
ஜிஎஸ்டி வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.மத்திய அரசு தமிழகத்தில் மத்திய நிதியுடன் கூடிய பல திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருக்கிறது என்றும் கூறினார். பின்னர் கடற்படை, கடலோரக் காவல்படையுடன் இணைந்து தமிழக அரசு ஒக்கி புயல் மீட்புப் பணிகளை மேற்கொண்டது எனவும் தெரிவித்தார்.மேலும் ஒக்கி புயல் பாதிப்பு தொடர்பாக பார்வையிட வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
சுகாதாரம், கல்வி, குழந்தைகள் நலம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு பெரும் தொகையை செலவிடுகிறது என்று குறிப்பிட்டார் .ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்விருக்கை அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார் .ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்னை விவசாயிகளை காக்க நீரா பானம் திட்டத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு
ஊரக வளர்ச்சிக்காக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்கை குறிப்பிட்டு பேசினார் .
கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தில் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டிருப்பதை ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டி பேசினார் .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.
ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கும் திட்டத்தையும் சுட்டிக்காட்டி ஆளுநர் உரையாற்றினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது எனவும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலை உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.
2017-18ஆம் ஆண்டில் 1,436 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை ரூ.608 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார் .
கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்து தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை 45A-வை நான்கு வழிச்சாலையாக முதற்கட்டத்தில் மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாகை-கன்னியாகுமரி சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்…
உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது..
தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்திற்கு உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது..
தூய்மை இந்தியா இயக்கத்தில் சிறப்பான பங்களிப்பை நல்கி வரும் தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அறவே இல்லாத மாவட்டங்களாக 16 மாவட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அரசின் திறன்மிகு நகரங்கள், அம்ருத் திட்டங்களை முழுஆர்வத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாநகரங்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறினார் .
அம்ருத் திட்டத்தின் கீழ் 33 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறினார் .
இதுவரை திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.825 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது எனவும் கூறினார் .அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.951 கோடியை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியுதவியாக விடுவித்துள்ளது எனவும் கூறினார்.
கிராமப்புற மக்களுக்கு விலையில்லா வீட்டு வசதி வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் .
பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.14,462 கோடி மதிப்பீட்டில் 3.84 லட்சம் வீடுகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் எனவும் இதுவரை ரூ.1498 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்துவதற்கான நிதியைத் திரட்ட உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.உறைவிடக் கட்டணம் விதிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார் .சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டத்தில் மீதமுள்ள சுரங்க வழித்தடங்களும் 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல் எனவும் தனது உரையில் ஆளுநர் கூறினார் .
source: dinauvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024![suriya and bala](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/suriya-and-bala.webp)
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024![Congress MPs - BJP MPs Protest in Parliament](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MPs-BJP-MPs-Protest-in-Parliament.webp)