ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நிச்சயமாக தமிழகம் இணையும்! அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!

மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இது அந்தந்த மாநில உரிமைகளை பறிப்பது போலவும், உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தற்போது பேட்டியளித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ‘ மத்தியஅரசின் ஒரே நாடு ஒரேரேஷன் கார்ட் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இந்த திட்டம் மாநில அரசின் விதிகளுக்கு உட்பட்டு தமிழகம் இணையும் எனவும், அதேபோல வெளிமாநிலங்களில் ரேஷனில் அரிசி விலை கொடுத்து வாங்கும் நிலைஉள்ளது. ஆனால் தமிழகத்தில் எப்போதும்போல் விலையில்லா அரிசி வழங்கப்படும். மற்றும் சீனி, பாமாயில் போன்ற மளிகை பொருட்களும் தற்போது என்ன விலையில் விற்கப்படுகிறதோ, அதே மானிய விலையில் வழங்கப்படும். இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மத்திய அமைச்சரை சந்தித்து நேற்று இத்திட்டம் குறித்து விவாதித்து உள்ளார். ‘ என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025