இனி இலவசமாக மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

Default Image
மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கட்டணமின்றி வழங்கப்படும் என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 கோடியே 89 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜைகள் பாதிக்கப்படும் என்றும், மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் போது 17 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இனி இலவசமாக மேற்கொள்ள முடியும் என செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்