அமமுகவிலிருந்து நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்,விரைவில் மிகப்பெரிய மாநாடு-திமுகவில் இணைந்த பரணி பேட்டி

Default Image

அமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர் என்று திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அமமுக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன் பின்னர் திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர் .புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன்.

அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன்.திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்