சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் அதிரடி ரேஸிங் சேஸிங்காக உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஹீரோவாக நடிக்கிறார் ஹீரோயினாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சித்தார்த் டிராபிக் போலீஸ் ஆகவும், ஜிவி பிரகாஷ் குமார் பைக் ரேஸராகவும் நடித்துள்ளார். பைக் ரேஸ் அனைத்தும் சென்னை பிரதான சாலைகளில் நடப்பது போல் உள்ளது. அதனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவர்களுக்குள் நடக்கும் ரேஸிங் த்ரில்லர் கதையாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் உருவாகியுள்ளது என டிரெய்லரில் தெரிகிறது. படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் இந்த ட்ரைலரை பார்த்துள்ளனர்.