பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள்-வெளியுறவுத்துறை அமைச்சகம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.அதில், 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர்.அதாவது இவர்களின் குடியுரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் 19,06,657 பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் பெயர்கள் இல்லாதது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.அதில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். ஏற்கனவே உள்ள சலுகைகளை சட்டப்படி பெறலாம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பதிவேடு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.