நிலவை நோக்கி விரையும் சந்திரயான் 2..! 5-வது முறையாக மாற்றியமைப்பு-இஸ்ரோ இன்பச் செய்தி
சந்திரயான் 2 வின் சுற்றுவட்டப்பாதை 5-வது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 27ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.இதை தொடர்ந்து ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நிலவை சுற்றி வருகிறது.
இந்நிலையில் சந்திரயான்2 விண்கலம் ஆனது நிலவை மேலும் நெருங்கின்ற வகையில் 5வது முறையாக சந்திராயன்2 சுற்றுப்பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது மாற்றி அமைத்தனர்.
இந்நிலையில் சந்திரயான் 2 நிலவுச் சுற்றுப்பாதையின் தற்போதைய உயரமானது குறைந்தபட்சம் 119.கி.மீ.ஆக உள்ளது அதிகபட்சம் உயரமாக 127 கி.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ இன்பச் செய்தியை தெரிவித்துள்ளது.
— ISRO (@isro) July 22, 2019