#IndvsWI 2nd Day: விஹாரி சதம்,பும்ரா ஹாட்ரிக் சமாளிக்க முடியாமல் திணறும் மேற்கிந்திய தீவு
இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி களமிறங்கியது இந்திய அணி.லோகேஷ் ராகுல் ,புஜாரா,ரஹானே சிறப்பாக ஆடவில்லை என்றாலும் மாயங் அகர்வால்(55) மற்றும் விராட் கோலி(76) அரைசதம் கடந்தனர் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .அப்பொழுது ரிஷாப் பந்த் (27) மற்றும் ஹனுமா விஹாரி (42) களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள்
இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது அதில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.இதில் 16 பௌண்டரிகள்அடங்கும். பின்பு இஷாந்த் ஷர்மா(57) தனது பங்கிற்கு அரை சதம் அடித்து மேற்கிந்திய தீவின் பந்து வீச்சை தும்சம் செய்தனர்.முதல் இன்னிங்சில் இந்தியா 416/10 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது .
தடுமாற்றத்தில் மேற்கிந்திய தீவு
அதன் பின்பு களமிறங்கிய மேற்கிந்திய தீவு இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது .30 ரன்களை தாண்டுவதற்குள் பும்ராவின் மஜிக்கில் அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்தது.8 வது ஓவரில் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் இதனால் சற்று நிலை தடுமாறியது மேற்கிந்திய தீவு.அந்த அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 34 ரன்கள் எடுத்து ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவு 7 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்களை எடுத்துள்ளது பும்ரா 6 விக்கெட்களையும் முகமத் ஷமி 1 விக்கெட்டை எடுத்தார் .
IND 416 – WI 87/7 (33.0)