நீங்க முன்னால போன நாங்க பின்னால வாரோம்-அமெரிக்கா விரையும் அமைச்சர்கள்..!
தமிழக முதல்வர் பழனிச்சாமி அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் பயணத்தின் போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.இந்நிலையில் தமிழக அமைச்சா்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர் .
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அமைச்சா் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நாளை அமெரிக்காவில் முதலமைச்சரோடு நாங்கள் இணைகிறோம்.
மேலும் அவர் பேசுகையில் அமெரிக்காவில் சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து, அங்குள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.