லொஸ்லியா பெரிய கில்லாடியா இருப்பாங்களோ? நான் உனக்கு அவன்! கவின் உனக்கு அவரா?
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தமிழ் மக்களின் பேராதரவுடன், பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், தர்சன், லொஸ்லியாவிடம் வம்பிழுக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வாறு பேச்சு நீடித்துக் கொண்டே போக, தர்சன், கவினை பிடித்து அடிக்க வேண்டும் என கூறுகிறார். உடனே லொஸ்லியா அவரை எதுக்கு அடிக்கணும். அவரு பாவம் என்று கூறுகிறார். அதற்கு தர்சன் நான் உனக்கு அவன், கவின் உனக்கு அவரா? என கேள்வி எழுப்புகிறார்.