மாணவிகள் பேராசிரிகளின் வீடுகளுக்கு செல்ல தடை -சென்னை பல்கலைக்கழகம்

கல்வி தொடர்பாக மாணவிகளை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள் அழைத்து செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் தங்களது கல்லூரி பேராசிரியர்களின் வீடுகளுக்கு செல்வதால் அவர்களை பாலியல் சம்பந்தமாக குற்றங்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வருகிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைகழகம் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும் வெளியில் தங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது அவ்வாறு கல்வி சார்ந்து தங்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என சென்னை பல்கலை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பேராசிரியர்கள் தரப்பிலிருந்து மாணவ-மாணவிகளுக்கு ஏதும் தவறு இழைத்தால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக மாணவிகளுக்கு தங்கள் பேராசிரியர்களால் பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது .
இவ்வாறு வரும் பாலியல் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவிடம் மாணவிகள் தெரிவிக்கலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.