மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி-முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று முதமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.அங்கு தமிழக முதமைச்சர் பழனிசாமி நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அப்பொழுது அவர் பேசுகையில், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.