திருப்பதியில் தரிசனம் செய்தார் பி.வி.சிந்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை சிந்து சாதனை படைத்துள்ளார்.
இதனிடையே தங்க வென்ற கையோடு பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் அவர் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நான என் இந்த வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக திருப்பதி வந்தேன். என்னுடைய அடுத்த இலக்கு வருங்காலங்களில் நடக்க இருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவதே என்று தெரிவித்தார்.