தோனி தென்ஆப்பிரிக்கா டி20 போட்டியில் இடம்பெறாததற்கு காரணம் இதுவா
உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பல யூகங்கள் கிளம்பின ஆனால் தோனியும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது இதனை அடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.அதன் பின்பு பயிற்சியை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.தற்பொழுது அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்
ராணுவத்தில் பயிற்சி ஈடுபட்டதால் மேற்கிந்திய தீவுக்கு எதிரான தொடர்களில் அவர் விளையாடவில்லை. இதனிடையே நேற்று தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் 15 பேர் கொண்ட பட்டியலில் பிசிசிஐ வெளியிட்டது இதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் இடம் பெற்றுள்ளார் இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்..
ஆனால் தோனி உலக கோப்பை போட்டிக்கு பின்பு இரண்டு மாதங்கள் ஓய்வில் இருப்பதால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது .