இந்தியா அணியின் சுவர் டிராவிட்டிற்கு வந்த இரட்டை பதவி சிக்கல்!
இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உடபட்டோருக்கான யு-19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனது பணியை செய்து கொண்டு வருகிறார் இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்.
இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், அவர் மீது இரட்டை பதவி ஆதாயம் பார்க்கிறார் என குற்றச்சாட்டு .எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கும் , 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளர்களாக முறையே, சிதான்ஷூ கோடக், பாரஸ் மாம்பரே ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாம். இவர்கள் சிறுது காலம் மட்டும் இந்த பணியை செய்ய உள்ளனராம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.