களைகட்ட தொடங்கிய செப்டம்பர் 6! தனுஷ் – ஆர்யா – ஜி.வி – சித்தார்த்!
நாளை பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்து செப்டம்பர் 20 இல் சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் உள்ள 3 வாரத்தை குறிவைத்து செப்டம்பர் 6ஆம் தேதி முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
முதலில் தனுஷ் நடிப்பில்கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆக உள்ளது.
அடுத்து மௌன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள மகாமுனி திரைப்படம் செப்டம்பர் 6இல் வெளியாக உள்ளது.
தற்போது பிச்சைகாரன் படத்தை இயக்கிய சசி இயக்கியுள்ள சிவப்பு – மஞ்சள் – பச்சை திரைப்படமும் இதே தேதியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் இருவரும் நடித்துள்ளனர்.