மாணவர்கள் மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்!
கிருஷ்ணகிரியில், தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை, என்றும் கூறினார். மேலும், தமிழக கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் உறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும், என்றும் கூறினார். கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில், 40 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
தமிழக முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள், தலா 5 மரம் வீதம் வளர்த்தால், கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும், என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2 கோடி மதிப்பில் 123 நூலகங்கள் புதுப்பிக்கப்படும், என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
source: dinasuvadu.com