சென்னையில் 2017 ஆம் ஆண்டில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 குற்றவாளிகள் கைது…!!
2017 ஆம் ஆண்டின் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 2017ல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.