காஷ்மீர் பிரச்சினை !எந்த நாடும் தலையிட இடம் இல்லை- ராகுல் காந்தி கருத்து
காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு அந்நிய நாடும் தலையிட இடம் இல்லை என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.
I disagree with this Govt. on many issues. But, let me make this absolutely clear: Kashmir is India’s internal issue & there is no room for Pakistan or any other foreign country to interfere in it.
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2019
இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்தநிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நான் இந்த அரசுடன் பல விஷயங்களில் வேறுபடுகிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொள்கிறேன். காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் பிரச்சினையில், பாகிஸ்தான் உள்பட எந்த ஒரு அந்நிய நாடும் தலையிட இடம் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது. அங்கு உள்ள வன்முறைகள் பாகிஸ்தான் ஆதரவுடன், தூண்டுதலுடன் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் நாடு பாகிஸ்தான் என்பது உலகம் முழுவதும் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.