ஆக்சன் படத்தை அடுத்து விஷால் நடிக்கப்போவது துப்பறிவாளன்-2வா? இரும்புத்திரை-2வா?!

நடிகர் விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிந்து சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தை அடுத்தது இரும்புத்திரை-2 திரைப்படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இரும்புத்திரை-2 திரைப்படத்தின் கதைக்களத்தில் இன்னும் வேலை செய்து விட்டு வருமாறு இயக்குனரிடம் கூறி அனுப்பிவிட்டாராம். ஆதலால், மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தில் விஷால் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குனர் மிஷ்கின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஆக்சன் படத்தை முடித்து விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அல்லது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அது இல்லாமல் அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாரா என்பது தற்போது குழப்பமாக உள்ளது. விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025