கடினமான யோகா செய்வதாக கூறி 80 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி..!
மெக்ஸிக்கோவை சேர்ந்த கல்லூரி மாணவி அலெக்ஸா (23). இவர் ஆறாவது மாடி உள்ள ஒரு அறையில் வசித்து வருகிறார். தன்னுடைய அறையில் ஆறாவது மாடியிலிருந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
கடினமான யோகா பயிற்சி செய்யப்போவதாக கூறி கம்பியில் தலைகீழாக நின்று யோகாசனம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கைதவறி கீழே விழுந்துள்ளார்.
அவர் விழுவதற்கு முன் அவர் தோழி எடுத்த புகைப்படம் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது
தலைகீழாக விழுந்த அலெக்ஸா உடலின் 110 எலும்புகள் உடைந்துள்ளன. உடலில் கால் , கை முதுகு என பல இடங்களில் காயங்களுடன் சிகிக்சை பெறும் அவருக்கு அவரின் பெற்றோர்கள் கோரிக்கையின் படி நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் கொடுக்க முன் வந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.