பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள்?புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதிசெய்வது குறித்து அனைத்துத்துறை செயலாளர்களுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகிறது.
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு நாட்களாக நடைபெற்றது.இந்த நிலையில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யவுள்ளதையொட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அம்சங்களை இறுதிசெய்வது குறித்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகிறது.