தளபதி-64இல் வில்லனாக களமிறங்குகிறாரா விஜய்சேதுபதி?! வெளியான ரகசிய தகவல்!
தளபதி விஜய் தற்போது பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், கார்த்தியின் கைதி திரைப்படங்களும் வெளியாக உள்ளது.
அடுத்ததாக தளபதி விஜய் மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவியது.
அதுபற்றி படக்குழுவினர் கூறிய அதிகாரபூர்வ தகவல் என்னவென்றால், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம், விஜய் சேதுபதியும் நண்பர்களாம் ஆதலால் தான் அவர்கள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தளபதி-64இல் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவில்லை என உறுதியாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.