நாமக்கல் அருகே திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாமக்கல் அருகே திமுக பிரமுகர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தவர் ஆனந்த்.இவர் நர்சிங் ஹோம் நடத்தி வருகிறார்.இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று பரமத்தி வேலூர் அடுத்த செங்கப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளார் ஆனந்த். தரையில் அமர்ந்தபடி கீழிருந்து மேலாக கழுத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.