பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி தராததால் முத்தலாக் கூறிய விவாகரத்து செய்த கணவன் ..!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அவளுடைய கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சிறையில் இருக்கும் தனது கணவர் பக்ரீத் பண்டிகையின் போது தனக்கு புது ஆடை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் அப்பெண் பக்ரீத் பண்டிகையின் போது புது ஆடை வாங்கி செல்லாததால் இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். குறித்த பெண் கூறுகையில் , பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் என்னிடம் போதிய பணம் இல்லாததால் ஆடை வாங்கி செல்ல முடியவில்லை இதைத் தொடர்ந்து நான் சந்திக்க சென்றபோது முத்தலாக் கூறினார். என்னுடைய உறவினர்களை அழைத்து சென்றபோது மீண்டும் முத்தலாக் கூறினார்.
இதையடுத்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் என் கணவர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. முத்தலாக் தடை சட்டம் பிறகு பதிவு செய்யப்பட்ட எட்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.