குடிபோதையில் ஏற்பட்ட தகராறு..!நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்..!

Default Image

திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் காக்கா கார்த்திக் இருவரும் கடந்த 7-ம் தேதி “நேர்கொண்டபார்வை” படம் பார்க்க சென்றனர். அப்போது டிக்கெட் வாங்கும் இடத்தில் பொன்மலை பகுதியை சார்ந்த பிரபாகரனுடன் தகராறு ஏற்பட்டது.இதில் தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் பிரபாகரனை கத்தியால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியதால் காயமடைந்த பிரபாகரன் பொன்மலை போலீசாரில்  புகார் கொடுத்தார்.

இந்நிலையில்தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் தங்களின் மற்ற  நண்பர்களான ஆட்டோ ஜெகன் ,  மணிகண்டன் மது அருந்திக் கொண்டிருந்த  போது போதையில் மணிகண்டன் கத்தியை பிடித்து கூட தெரியவில்லை என தமிழழகனை பார்த்து கிண்டலாக பேச ஆத்திரமடைந்த தமிழழகன் கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஜகன், மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழழகனை  கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தமிழழகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அரியமங்கலத்தில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்து உள்ளனர்.

இதையடுத்து தமிழழகனை காணவில்லை என காவல்துறை தேடி வந்தேன். பின்னர் காக்கா கார்த்திக் விசாரித்துள்ளார். விசாரணைகள் நடத்தி உண்மையை கூறியதால் காக்கா கார்த்திக்கை  கைது செய்து உள்ளனர். போலீசார் தப்பியோடிய ஆட்டோ ஜெகன் மற்றும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்