பிரதமரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற பி.வி.சிந்து!ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்த மத்திய அரசு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சுவிஸ்சர்லாந்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது.இதில் நடைபெற்ற மகளீர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் அபார வெற்றிபெற்றார்.இதன் மூலமாக உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.ஏற்கனவே சிந்து இரண்டு முறை இறுதிப்போட்டியில் மோதி வெள்ளி வென்ற நிலையில்,இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சிந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்அப்போது அமைச்சர் கிரண் ரிஜிஜூரூ 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பி.வி.சிந்துவை ஊக்குவித்தார்.இதனைத்தொடர்ந்து பி.வி.சிந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.