மறைந்த அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி
முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து அருண்ஜெட்லி உடல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.அங்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அருண் ஜெட்லி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.