பற்றி எரியும் தீயை அணைக்க உதவ முன்வந்த ஜி 7 நாடுகள்!உதவியை நிராகரித்த பிரேசில்

Default Image

உலகின் நுரையீரல் என்று அனைவராலும் கருதப்படும் அமேசான் காட்டில் சில நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது.

அமேசான் காடு  பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும்.இந்த ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. இந்த காட்டின் பெரும்பகுதி பிரேசிலில் தான் உள்ளது.

இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாகவே அமேசான் காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.தீயை அணைக்க பிரேசில் நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.பல்வேறு நாடுகளின் கோரிக்கையை தொடர்ந்து ராணுவத்தை தீயை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தார் பிரேசில் நாட்டு அதிபர்.குறிப்பாக தீயை அணைக்க போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க, ரூ.160 கோடி ( 20 million euro) நிதி உதவி வழங்க தயராக இருப்பதாக ஜி 7 நாடுகள் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஜி 7 நாடுகளின் உதவியை பிரேசில் அரசு  நிராகரித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்