மோடி நல்ல ஆங்கிலம் பேசுவார்-ட்ரம்ப்..! அதன் பின்னர் என்ன நடந்தது தெரியுமா ?
பிரான்சில் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்ததை அடுத்து முதன் முறையாக இந்தியா சார்பில் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிரான்சில் ஜி-7 மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் , உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
#WATCH France: US President Donald Trump jokes with Prime Minister Narendra Modi during the bilateral meeting on the sidelines of #G7Summit. Trump says, “He (PM Modi) actually speaks very good English, he just doesn’t want to talk” pic.twitter.com/ee66jWb1GQ
— ANI (@ANI) August 26, 2019
இந்த சந்திப்பில் இருவரும் காஷ்மீர் விவகாரம் மற்றும் பல்வேறுநிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இப்போதும் போல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆங்கிலத்தில் பேச , மோடி ஹிந்தியில் பேசினார். அவரது பேச்சு மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
அப்போது டொனால்டு ட்ரம்ப் , மோடி நன்றாக ஆங்கிலம் பேசுவார். ஆனால் தற்போது ஆங்கிலத்தில் பேச விரும்பவில்லை என கூறினார் . டொனால்டு ட்ரம்ப் சொன்ன பிறகு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.