நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜி வி பிரகாஷ் இசையில் பாடியுள்ள தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல், கருணாஸின் மகன், ரட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பாடல்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னால் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் மயக்கம் என்ன திரைப்படத்தில் பாடல் பாடியிருந்தார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025