அருண்ஜெட்லி இறுதி ஊர்வலம் !துணை முதலமைச்சர் டெல்லி பயணம்

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
நேற்று டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.இதனையடுத்து அருண்ஜெட்லியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.