IND vs WI : அரைசதம் விளாசிய கோலி , ரஹானே ..! இந்திய அணி 260 ரன்களுடன் முன்னிலை..!
இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் இரண்டாவது நாள் விளையாடிய ஜடேஜா மற்றும் பண்ட் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் மத்தியில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் குவித்தார்.
இதையெடுத்து ஷாய் ஹோப் , ஷிம்ரான் ஹெட்மியர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். இறுதியாக இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் குவித்தது.
இதை தொடர்ந்து மூன்றாம் நாள் நேற்று மீண்டும் தொடங்கி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 39 ரன்கள் குவித்தார்.இறுதியாக 74.2 ஓவரில் 222 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டையும் , ஷமி ,ஜடேஜா இருவரும் தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர். இந்நிலையில் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது.
தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 16 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய புஜாரா , கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்ந்தனர்.அணியின் எண்ணிக்கை 73 ஆக இருந்த போது கே.எல் ராகுல் 38 ரன்களுடன் வெளியேறினார்.
அடுத்த சிறிது நேரத்தில் புஜாரா 25 ரன்னுடன் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் கைகோர்க்க சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 260 ரன்களுடன் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.இன்று நான்காம்நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.