டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனையை தகர்த்த பும்ரா…!
இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் பும்ரா பிராட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் தனது 50 வது விக்கெட் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.
மேலும் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 2597 பந்தில் தனது 50 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆனால் பும்ரா 2464 பந்தில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எனவே குறைந்த பந்தில் 50 விக்கெட்டை வீழ்த்தி என்ற சாதனை படைத்துள்ளார்.
ஆனால் குறைந்து போட்டியில் 50 விக்கெட்டை வீழ்த்திய பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.அஸ்வின் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.ஆனால் பும்ரா 11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.