வைகோ மீதான அவதூறு வழக்கு !ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு
வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வைகோ வழக்கு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.