முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கில் குண்டு வெடிக்காததால் போலீசார் அதிர்ச்சி..!
பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாந்த் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி இறந்தார். இதை தொடர்ந்து இவரது உடலை இரண்டு நாட்களுக்கு கழித்து நேற்று முன்தினம் சுபவுல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி சடங்கில் போது அரசு சார்பில் 22 குண்டுகள் முழக்க மரியாதை செலுத்த இருந்தார்கள்.அப்போது போலீசார் ஒன்றாக துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். அதிலிருந்து ஒரு போலீசாரின் துப்பாக்கி குண்டு வெடிக்கவில்லை.
#WATCH Rifles fail to fire during the state funeral of former Bihar Chief Minister Jagannath Mishra, in Supaul. (21.8.19) pic.twitter.com/vBnSe7oNTt
— ANI (@ANI) August 22, 2019
இறுதி சடங்கில் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஒரு துப்பாக்கிக் குண்டு வெடிக்காதது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.