ஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம் -தமிழிசை

Default Image

ஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சட்டத்தை எதிர் கொண்ட முறை மிகவும் தவறானது. தன்மீது குற்றம் இருக்கிறது என்பது ப.சிதம்பரத்துக்கே தெரியும் காஷ்மீர் விவகாரத்தில்  டெல்லியில் திமுக நடத்திய போராட்டம் ஏதோ நடத்த வேண்டும் என்று நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம். ஸ்டாலின் இம்ரான்கானுடன் கூட்டணி வைக்கிறாரா என்பது தெரியவில்லை. திமுகவுக்கு இது பெருமை சேர்க்காது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்